தவெக தலைவர் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்தி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் சங்கீதாவை, விஜயின் தொண்டர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். இதற்கு ஜனநாயக மாதர் சங்கம் கணடனம் தெரிவித்துள்ளது. மேலும், “சங்கீதா மீது ஆபாச அவதூறு பரப்புவோர் மீது தவெக கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்த ஆபாச அர்ச்சனைக்கு விஜய் எதிர்வினையாற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.