உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த மருமகன் தீபக், முதலை தாக்குதலில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரயு நதிக்கரையில் கைகளை கழுவ சென்றபோது திடீரென முதலை தாக்கி ஆழமான நீருக்குள் இழுத்துச் சென்றது. அச்சத்தில் உறைந்த மக்கள் காப்பாற்ற முடியாமல் தவித்தனர். காவல்துறை மற்றும் வனத்துறை தீவிர தேடுதல் நடத்தியபோதும், இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.