பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு மீது எழுந்துள்ள விமர்சனங்களை அடுத்து, முதல்வர்
விஜய் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் விடுத்த மறுபரிசீலனை கோரிக்கையைத் தொடர்ந்து இக்கூட்டம் நடந்துள்ளது. இதில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்தால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு குறித்த அறிக்கையை அவர் கேட்டுள்ளார்.