தஞ்சாவூரில் இன்று (மார்ச் 4) பேசிய தவெக தலைவர் விஜய், சில வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில், “தவெக ஆட்சிக்கு வந்ததும் உரத்தட்டுப்பாடு இருக்காது, 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யவும், 5 ஏக்கருக்கு மேல் 50% ரத்து செய்ய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். நிலமற்ற விவசாயிகள் குடும்பத்தில், குழந்தைகளின் பொறியியல், மருத்துவ செலவை அரசே ஏற்கும். நெல் மூட்டைகள் முறையாக பாதுகாக்கப்படும். கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும்” என்றார்.