தமிழ்நாட்டில், வறண்ட வானிலை மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் நிலவுவதால் பயிர்களில் நீர்ச்சத்து குறைந்து அவை பலவீனமடைகின்றன. இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நீர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல், பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, சிவப்பு சிலந்தி போன்றவற்றின் தாக்குதல் கோடை காலங்களில் அதிகரிக்கின்றன. இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.