ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோனூரில் நேற்று ஒரு வீட்டில் பூஜை செய்தபோது, மொட்டை மாடியில் விளக்கேற்றப்பட்டது. அந்த விளக்கை காகம் தூக்கிச் சென்று குடிசை வீட்டின் மீது போட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோபி என்பவரது வீடு முழுமையாக எரிந்து, ரூ.1 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் சாம்பலாயின. மேலும் 3 குடிசை வீடுகளும் எரிந்தன. தாசில்தார் சி.எச் பங்கர்ராஜு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சொத்து இழப்பு சுமார் ரூ.4 லட்சம் என மதிப்பிட்டு, அரசு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.