வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு இன்று (பிப்.23) நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள காரில் சென்ற விஜய்யை பார்க்க, நெடுஞ்சாலையிலேயே திரளாக திரண்டு அவரது காரை நோக்கி ஓடிய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து, ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.