பங்களாதேஷின் நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில், எதிர்வரும் பக்ரீத் (குர்பானி) பண்டிகைக்காக வளர்க்கப்பட்டு வந்த அல்பினோ ரக வெள்ளை எருமை ஒன்று இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அதன் தலையில் உள்ள பொன்னிற முடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமுடியை போன்று இருப்பதால், அதற்கு 'டொனால்ட் டிரம்ப்' என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 700 கிலோ எடை கொண்ட இந்த எருமையை காணவும், அதனுடன் செல்ஃபி எடுக்கவும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் அங்கு ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.