சாலை விபத்தில் 3 CRPF வீரர்கள் உள்பட 4 பேர் பலி

4182பார்த்தது
சாலை விபத்தில் 3 CRPF வீரர்கள் உள்பட 4 பேர் பலி
சத்தீஷ்காரில் CRPF வீரர்கள் சிலர் பாதுகாப்பு பணியை முன்னிட்டு, ஜக்தல்பூர் நகரில் இருந்து புறப்பட்டு ராய்ப்பூர் நகர் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடைய வாகனம் தாம்தரி மாவட்டத்தில் காப்ரி பைபாஸ் பகுதியருகே சென்றபோது கார் ஒன்றின் மீது மோதியது. இந்த விபத்தில், 3 CRPF  வீரர்கள் மற்றும் கார் ஓட்டுநர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி