விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் லீகான நிலையில், குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "பைரசி என்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு திட்டமிட்ட திருட்டு. அதில் ஈடுபடுபவர்கள் சாதாரண குற்றவாளிகளாக கருதக்கூடாது. ‘ஜனநாயகன்' படம் கசிந்தது என்பது, அதில் உழைத்த ஒவ்வொரு கலைஞர், தொழில்நுட்ப நிபுணர், மற்றும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் நேர்ந்த கொடூரமான துரோகம்” என்றார்.