ஐபிஎல் 2026 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், 'கேப்டன் கூல்' எம்.எஸ். தோனி இன்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், டி20 உலகக்கோப்பை முடிந்து மார்ச் 8-ஆம் தேதிக்கு பிறகு சேப்பாக்கத்தில் முழுவீச்சில் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. அதுவரை சிஎஸ்கே அகாடமியில் வீரர்கள் தங்களது ஆரம்பகட்ட பயிற்சியைத் தொடங்குவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.