சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 10) நடைபெற்ற IPL தொடரின் 53-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, ஷாபாஸ் அகமதுவின் (43 ரன்கள்) அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தற்போது சிஎஸ்கே அணி தனது இன்னிங்ஸை ஆடத் தயாராகி வருகிறது.