ஒரே ஓவரில் 2 விக்கெட்டை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகிறது. 197 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்யும் CSK அணிக்கு RCB ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் ராகுல் திரிப்பாதி (5), ருதுராஜ் கெய்க்வாட் (0) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது CSK அணி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் (9) மற்றும் தீபக் ஹூடா (4) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.