
கரைமேடு அருகே சாலை மறியல் போராட்டம்
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கரைமேடு கிராமத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், இலவச வீடு கட்டி குடியிருந்து வருபவர்களை அப்புறப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் கரைமேடு பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






































