அதிமுக உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள சூழலில், எஸ்பி வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்துள்ளனர். சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டப்பேரவை தலைவராகவும், தன்னை கொறடாவாகவும் அங்கீகரிக்கக் கோரி சபாநாயகரிடம் அளித்த மனுவை சி.விஜயபாஸ்கர் திரும்பப் பெற வந்துள்ளார். அருண் மொழித்தேவனும் அவருடன் வந்துள்ளார்.