புவனகிரி: ஹான்ஸ் விற்ற 2 பேர் கைது

531பார்த்தது
புவனகிரி: ஹான்ஸ் விற்ற 2 பேர் கைது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், குறியாமங்கலம் மெயின் ரோடு தெருவில் பெட்டிக்கடைகளில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்த கோவிந்தராஜ் (65) மற்றும் ராஜலட்சுமி (60) ஆகியோரை கைது செய்தனர். கோவிந்தராஜிடமிருந்து 120 ஹான்ஸ் பாக்கெட்டுகளும், ராஜலட்சுமியிடமிருந்து 150 ஹான்ஸ் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.