புவனகிரி: சமுதாய வளைகாப்பு விழா

51பார்த்தது
புவனகிரி: சமுதாய வளைகாப்பு விழா
கடலூர் மாவட்டம் புவனகிரியில் புவனகிரி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் டி. ஜெயமாலதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆத்மா திட்ட குழு உறுப்பினர் பி.ஜே.கே. முத்து, 6வது வார்டு கவுன்சிலர்கள் சரஸ்வதி, மணிவண்ணன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

இதில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், மாலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களோடு நலுங்கு வைத்து வளையல் அணிவித்து வளைகாப்பு விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு அறுவகை உணவு பரிமாறப்பட்டது. இதில் மேற்பார்வையாளர் நிலை 1 சகுந்தலா மற்றும் மேற்பார்வையாளர் நிலை 2 சம்பு செல்வி வனஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.