புவனகிரி: விஷம் குடித்து விவசாயி தற்கொலை

494பார்த்தது
புவனகிரி: விஷம் குடித்து விவசாயி தற்கொலை
புவனகிரி அருகே பூதவாராயப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான விவசாயி நீலமேகம், சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நீலமேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி