புவனகிரி: டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றாமல் காலம் தாழ்த்துவதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.