கடலூர் மாவட்டம், சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்வி வளாகங்களில் சாதியப் பாகுபாடுகளைத் தடுக்க உருவாக்கப்பட்ட தனிச் சிறப்புச் சட்டமான ரோஹித் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ். எப். ஐ கிளை தலைவர் அன்பு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் சிவநந்தினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகளை ஒழிக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.