கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள குஷால் பேங்கர்ஸ் என்ற வட்டி கடைக்கு வந்த சிவப்பு புடவை அணிந்த பெண் ஒருவர், 3.900 மி.கிராம் எடையுள்ள தங்க நகை வலையத்தை ரூ. 28,800-க்கு அடமானம் வைத்து பணம் பெற்றுச் சென்றார். பின்னர், கடையின் உரிமையாளர் நகையைச் சோதித்தபோது அது போலி நகை எனத் தெரியவந்தது. அந்தப் பெண் கொடுத்த முகவரியும் போலியானது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மர்மப் பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.