சிதம்பரத்தை அடுத்த கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியும் மாரிமுத்து மீது, அங்கு பணிபுரியும் பெண் மருந்தாளுனர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆபாசமாக பேசியதாக கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் மருத்துவர் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.