கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான திருமூர்த்தி (56) வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.