கடலூர் மாவட்டம் ஒரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் பன்னப்பட்டு, செங்கமேடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நாகரத்தினம் (60) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிந்து நாகரத்தினத்தை கைது செய்து, 15 குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.