பரங்கிப்பேட்டை அருகே, செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தபோது, படகில் இருந்து தவறி கடலில் விழுந்த மீனவா் மதன் (45) நீரில் மூழ்கி உயிரிழந்தாா். சி.புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (35) மற்றும் சுனாமி நகரைச் சோ்ந்த பரிதி (30) ஆகியோருடன் சென்ற மதன், கடலில் விழுந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணியளவில், மதனின் உடல் சி.புதுப்பேட்டை கடற்கரையோரம் ஒதுங்கியது. பரங்கிப்பேட்டை போலீஸாா் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.