கடலூர் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்பு சங்கம் மற்றும் பரங்கிப்பேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து நாளை (பிப்ரவரி 23) பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துகிறது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவச பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 6381700330, 9994305111 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.