பரங்கிப்பேட்டை: மதுபாட்டில்கள் விற்றவர் கைது

1பார்த்தது
பரங்கிப்பேட்டை: மதுபாட்டில்கள் விற்றவர் கைது
பரங்கிப்பேட்டை அருகே பி. முட்லூர் குடிக்கால் நகரில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்மின்லதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆணையாங்குப்பம் புதுத்தெருவை சேர்ந்த பாஷா மகன் முபாரக் (வயது 45) என்பவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து முபாரக்கை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி