கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில் உள்ள கொண்டை புறையாத்தமன் கோவிலில் கடந்த 14 ஆம் தேதி, மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 3 ஆயிரம் ரூபாய் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த அரை சவரன் தங்க நகையை திருடிச் சென்றனர். இது குறித்து கோவில் பூசாரி முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.