கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியேற்றிய நீரால் பூவாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தெரிவித்துள்ளார். அவர் நேரில் சென்று பார்வையிட்டபோது, பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் உடனிருந்தனர்.