கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே கீழ்பூவாளிக்குப்பத்தில் ஜெயராமன் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றார். அவர் திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூபாய் 5 ஆயிரம் மற்றும் பித்தளைப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.