கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே நேற்று மாலை வாகன சோதனையின் போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவர் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.