புதுச்சத்திரம்: வீட்டில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது

677பார்த்தது
புதுச்சத்திரம்: வீட்டில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் துறையினர் நேற்று ரோந்து பணியின் போது, கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) என்பவர் அரசு அனுமதியின்றி வீட்டில் டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 16 குவாட்டர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி