கடலூர் மாவட்டம் புதுச்சேரி காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆலப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வம் வயது 54 என்பவர் தனது பெட்டிக்கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து 56 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.