கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து உணவு வாங்கிச் சென்ற ராஜா, அதில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு செய்து, வாடிக்கையாளர்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.