சேத்தியாத்தோப்பு அடுத்த மிராலூரைச் சேர்ந்த வசந்தா (68) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. வசந்தா கூச்சலிட்டதால், அவரது மகன் விரைந்து வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து சேத்தியாத்தோப்பு போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், மதுவானை மேடு கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (45) எனத் தெரியவந்தது. போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.