விருத்தாசலம்: ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு மேல் கொள்முதல்

விருத்தாசலம் சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா, உளுந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நெல் மற்றும் உளுந்து வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் நெல் உள்ளிட்ட தானியங்கள் 849 லாட் எடுக்கப்பட்டு, ரூ. 3 கோடியே 20 லட்சத்து 77 ஆயிரத்து 634-க்கு வர்த்தகம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.