
புவனகிரி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை
கடலூர் மாவட்டம் புவனகிரி வேலங்கிபட்டு பகுதியை சேர்ந்த 60 வயது வீரமணி, மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது மனைவியால் கண்டிக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த வீரமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரமணியின் மகன் வினோத்குமார் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






































