
சிதம்பரம்: மருத்துவமனையில் நேரில் சென்று எம்எல்ஏ ஆறுதல்
சிதம்பரம் தொகுதி கிள்ளை அருகே குச்சிச்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக வெடிகள் வெடித்து சிதறியதில் பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி எம்எல்ஏ மருத்துவமனைக்கு விரைந்து சென்று, அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

































