சிதம்பரம் ரயில் நிலையப் பகுதியில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மே 17 இயக்கத்தின் சார்பில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் கார்த்தி, மகேஷ், பார்த்திபன், கோகுல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.