உலகப் பிரசித்தி பெற்ற கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜா் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 21 அடி உயரமும் 21 அடி அகலமும் 21 படிகளுடன் கூடிய பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது. இதனை காண அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.