அண்ணாமலை நகர்: 24 தெருநாய்கள் பிடிப்பு

508பார்த்தது
அண்ணாமலை நகர்: 24 தெருநாய்கள் பிடிப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் ஹமீது அறிவுறுத்தலின் பேரில், துப்புரவு அலுவலர் துரைராஜ் முன்னிலையில் ஊழியர்கள் 24 நாய்களைப் பிடித்தனர். பிடிக்கப்பட்ட நாய்கள் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான கருத்தடை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கருத்தடை செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி