கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் இவர் அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்துவந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் பல முறை அவர் சிறுமியை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் தேடினர். அப்போது அவர் பக்கத்து ஊர் பஸ் நிறுத்தத்தில் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் சிறுமியை மீட்டு வந்து பெற்றோர் விசாரித்தனர். விசாரித்ததில் தனக்கு நடந்த கொடுமையை அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சிறுமியின் தந்தை சிதம்பரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தினேஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.