புவனகிரி: இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

598பார்த்தது
புவனகிரி: இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு
புவனகிரி அருகே செட்டிகுளம் கிராமத்தில் விவசாயி நாகலிங்கம் (49) என்பவர் வெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி