புவனகிரி: வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம்

68பார்த்தது
புவனகிரி:  வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம்
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்மாபுரம் ஒன்றியம் கார்குடல் கிராமத்தில் தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்த குடும்பத்தினரை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி