சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் பன்றி வளர்த்து
வருகிறார். மே 25 பன்றிகளுக்கு தீவனம் வைக்கச் சென்றபோது, பட்டியில் இருந்த ஒரு பன்றி மாயமாகி இருந்தது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, இரண்டு மர்ம நபர்கள் பன்றியைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீஸார் வழக்கு பதிவு செய்து, பன்றியைத் திருடிய சதீஷ் (28) மற்றும் சிவா (22) ஆகியோரைக் கைது செய்தனர்.