கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரான ராஜ பிரியன் (28), 17 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 மாத கர்ப்பம் உறுதியானதை அடுத்து, இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், ராஜ பிரியன் மீது போக்சோ மற்றும் சிறுமி திருமணம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்த ராஜ பிரியனின் தாய் ரஞ்சிதா மற்றும் அவரது உறவினர் வேல்முருகன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.