சிதம்பரம்: நாயுடன் தகாத உறவு..கைதான ஆசாமி

73பார்த்தது
சிதம்பரம்: நாயுடன் தகாத உறவு..கைதான ஆசாமி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நேரு நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த 7 ஆம் தேதி நள்ளிரவில் வளர்ப்பு நாய் வீட்டில் அதிக சத்தத்துடன் குரைத்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்ட விக்னேஷ் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர் நாயுடன் தவறாக நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சிதம்பரம் நேரு நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் நாயுடன் தவறாக நடந்ததும், நாயைப் பீர் பாட்டிலால் தாக்கியதும் தெரிந்தது. இதையடுத்து அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி