கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஓமக்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஓடையில் நேற்று (மே 18) 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த இளைஞர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.