கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில், அனந்தீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த நடராஜன் (45) என்பவரின் பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.