சிதம்பரம்: விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்

61பார்த்தது
சிதம்பரம்: விசிக மாவட்ட செயற்குழு கூட்டம்
மே 6ந்தேதி சிதம்பரத்தில் நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டத்திற்கு கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் சிதம்பரம் பைசல் மஹால் திருமண மண்டபத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி